வங்கக்கடலில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக கடலூரில் கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் உள்ள மக்களை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
நிவர் புயல் பாதிப்பு: கடலூரில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு! - cm visit cuddalore ahead of nivar cyclone
கடலூர்: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
நிவர்
முன்னதாக, தூக்கணாம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர், தேவனாம்பட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களைப் பார்த்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, கடலூர் துறைமுகத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து அரசு அலுவலர்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவருகிறார்.