தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பணிமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.3 கோடி மோசடி: பலே ஆசாமி கைது...! - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்

கடலூர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவரை, காவல்துறையினர் கைது செய்தனர்.

பலே ஆசாமி கைது
பலே ஆசாமி கைது

By

Published : Jan 1, 2021, 10:40 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வேப்பூர் புது காலனியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி, தான் அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணி செய்வதாகவும், இளநிலை உதவியாளர் பணிக்கு காலியிடம் இருப்பதாகவும் அதற்கு ரூ. 8 லட்சம் கொடுத்தால் வேலை வாங்கித் தருவதாக கூறினார்.

இதை நம்பிய மணிமாறனிடம் இருந்து ரூ. 8 லட்சத்தை பெற்று கொண்ட பாலச்சந்தர், போலி பணி நியமன ஆணை ஒன்றை வழங்கினார். அதன் பிறகு, 2020ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி விருத்தாச்சலம் அரசுப் பேருந்து பணிமனைக்கு மணிமாறனை வரவழைத்த பாலச்சந்தர், தன் மீது சந்தேகம் எழாமலிருக்கு தான் வைத்திருந்த போலி வருகை பதிவேட்டில் கையெழுத்து வாக்கிக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, தற்போது கரோனா காலம் என்பதால் மணிமாறனை பணிக்கு வர வேண்டாம் என பாலச்சந்தர் கூறினார். இதனால் சந்தேகமடைந்த மணிமாறன், விருத்தாச்சலம் பேருந்து பணிமனையில் விசாரணை செய்த போது, தனக்கு வழங்கிய பணி நியமன ஆணை போலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மணிமாறன் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோரிடம் பாலச்சந்தர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருதாகக் கூறி போலி பணி நியமன ஆணைகள் வழங்கி ஒரு கோடியே 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெற்றது தெரியவந்தது.

பின்னர் பாலச்சந்தரை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details