விவசாயத்தை அழிக்கின்ற புதிய சட்டங்களை வாபஸ் வாங்கக் கோரி விவசாய சங்கத்தினர் (சிஐடியு) கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி.கருப்பையன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினர்.
மத்திய அரசை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம் - அவசர சட்டங்கள் 2020
கடலூர்: விவசாயத்தை அழிக்கின்ற புதிய சட்டங்களை வாபஸ் வாங்கக் கோரி மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
CITU protest against central government
இதில், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் சுப்புராயன், ஆளவந்தார், பாபு, திருமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.