நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கடலூர் அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி ஹயக்ரீவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கரும்பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களைக் கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
கடலூர் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி பின்னர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்து, அதில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கையைப் பிடித்து "அ.. ஆ.." என தமிழ் எழுத்துகளை எழுதக் கற்று கொடுத்தனர். மேலும் குழந்தைகளும் இந்த ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதையும் படியுங்க:
விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி!