சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்ற பக்தர் கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்போது தர்ஷன் என்னும் தீட்சிதர் லதாவை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் லதா அளித்த புகாரின் பேரில், போலீசார் தீட்சிதர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். ஆனாலும் இதுவரை தர்ஷன் தீட்சிதரை போலீசார் கைது செய்யவில்லை. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பாஜகவின் மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத் என்பவர், சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜனை நேரில் சந்தித்து புகாரளித்தார். அந்தப் புகார் மனுவில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். உடனடியாக அவரை கைது செய்ய சார் ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தீட்சிதரை கைது செய்யக்கோரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் புகார் மனு இதைப்போல் மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் சார்பிலும் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சங்கத்தின் நிறுவனத் தலைவர் கோவி. மணிவண்ணன் சிதம்பரம் சார் ஆட்சியரை சந்தித்து ஒரு மனுவை அளித்தார். அம்மனுவில் கூறியதாவது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தர்ஷன் தீட்சிதரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வன்முறையில் ஈடுபடும் தீட்சிதர்கள் மீது ஏன் கைது நடவடிக்கை இல்லை..!