கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கட்டணத்தை வசூலிக்கக் கோரி மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, அரசாங்கம் இந்த கல்லூரி கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரியாக திகழும் என்றும், அதுமட்டுமின்றி அரசு கட்டணம் இங்கு வசூலிக்கப்படும் எனவும் அறிவித்து அரசாணை வெளியிட்டது.
ஆனால், கல்லூரி நிர்வாகம் இங்கு மாணவரிடம் பல மடங்கு கூடுதல் கட்டணத்தை மீண்டும் செலுத்த வலியுறுத்திவருகிறது. போராட்டம் ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தை கையில் எடுத்து போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச். 2) 63ஆவது நாளாக அரசு உத்தரவை அமல்படுத்தி குறைந்த கட்டணத்தை இங்கு வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரி முதல்வர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.