கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசனம் தொடங்கியது. இந்நிலையில் இன்று (டிச. 29) முக்கியத் திருவிழாவான தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தனித்தனி தேரில் அலங்கரிக்கப்பட்டு, ராஜ வீதி உலா சென்றனர்.
முன்னதாக ஆலயத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்குச் சிறப்புத் திருமுழுக்கு ஆராதனைகள் செய்யப்பட்டு, சிவ மேள வாத்தியங்கள் முழங்க ஆரவாரத்துடன் தேரில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.