தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம்' - கண்ணீர் வடிக்கும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள்

'அரசு கல்லூரிகளைப் போல இந்த கல்லூரியிலும் அரசு கட்டணம் வேண்டும் என்று தான் போராடி வருகிறோம். நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம் இது குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்' என்று மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற போராட்டம் எதிரொலி நிர்வாகம் தொடர் விடுமுறை அறிவிப்பு நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம் - கண்ணீர் வடிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் chidambaram-annamalai-university-second-and-third-year-medical-students-indefinite-struggle-echo-administration-series-holiday-announcement நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம் - கண்ணீர் வடிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் காலவரையற்ற போராட்டம் எதிரொலி நிர்வாகம் தொடர் விடுமுறை அறிவிப்பு நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம் - கண்ணீர் வடிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள்chidambaram-annamalai-university-second-and-third-year-medical-students-indefinite-struggle-echo-administration-series-holiday-announcement நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம் - கண்ணீர் வடிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள்

By

Published : Apr 26, 2022, 3:30 PM IST

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தற்போது முதலாமாண்டைச்சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளைப்போன்று கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு உள்ளிட்ட மாணவர்களுக்கு ரூ. 4 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி இரண்டாமாண்டு, மூன்றாமாண்டில் படிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 15 நாட்களாக பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் 5 தினங்களாக வகுப்புகளைப் புறக்கணித்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம் - கண்ணீர் வடிக்கும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள்

இதனிடையே, நேற்று (ஏப்ரல்.25) சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப்பதிவாளர் டாக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியில் இளநிலை படிக்கும் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்களைத் தவிர மற்ற மாணவர்களுக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் மாலை 4 மணிக்குள் விடுதிகளையும் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பைக் கேட்ட பிறகும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டப் பந்தலிலேயே போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இது குறித்து கூறிய மாணவர்கள், "அரசு கல்லூரிகளைப்போல இந்த கல்லூரியிலும் அரசு கட்டணம் வேண்டும் என்று தான் போராடி வருகிறோம். நாங்கள் வேறு என்ன பாவம் செய்தோம்.

தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரிக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவித்து விடுதிகளையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. இனி உணவு, குடிநீர், இருப்பிடத்திற்கு எங்கே செல்வோம். இதுகுறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்'' எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'மருத்துவப் படிப்பிற்கான இன்டர்ன்ஷிப் விகிதத்தை 20% ஆக்குங்கள்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details