தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட்ட மத்தியக்குழு - மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்

கடலூர்: மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை மத்தியக் குழுவினர் பார்வையிட்டு, பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

central-team-view-of-rain-damaged-crops-in-cuddalore
central-team-view-of-rain-damaged-crops-in-cuddalore

By

Published : Feb 6, 2021, 10:20 AM IST

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களைப் பார்வையிட மத்தியக் குழுவினர் வந்திருந்தனர்.

மத்திய மீன்வளத் துறை ஆணையர் டாக்டர் பால்பாண்டியன் தலைமையில் மத்திய மின் துறைச் செயலர் ஸ்ரீ சுபம் கார்க், தேசிய நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ரணன் ஜெய்சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் எரும்பூர் பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த நெல் பயிர்களைப் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

அங்கு நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகிய மழையால் சேதமடைந்த பயிர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து பெரியநெசலூர் பகுதியில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களைப் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையும் படிங்க: பழச்சாறு கடையில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரு காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details