தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!

கடலூர்: குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு 72 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

By

Published : Jun 11, 2020, 12:55 AM IST

சிசிடிவி கேமராக்கள்
சிசிடிவி கேமராக்கள்

கடலூரில் கடந்த சில நாள்களாக நெல்லிக்குப்பம், தேவனாம்பட்டினம் எனப் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பு, கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிவந்தன.

இதனால் குழந்தைகள், பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நகை பறிப்பு குற்றவாளிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் கடலூரில் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் அறிவுரையின்பேரில், சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தொடங்கப்பட்டது.

அதன்படி கடலூர் உள்கோட்டத்தில், முதல்கட்டமாக கடலூர் முதுநகர் காவல் நிலையம் எல்லையில் 14 இடங்களில் 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய எல்லையில், 10 இடங்களில் 32 சிசிடிவி கேமராக்கள் பொதுமக்கள் மற்றும் சிப்காட் கூட்டமைப்பு உதவியுடன் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, வணிகர் சங்கத் தலைவர் துரைராஜ், எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details