கடலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் பயனாளிகளாக சேர்ந்த 80 ஆயிரத்து 752 விவசாயிகளின் உண்மைத்தன்மை குறித்து நேரடி கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 40 ஆயிரத்து 752 பேர் திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வேளாண்மை இணை இயக்குநர் கடலூர் சிபிசிஐடி காவல் துறையில் புகாரளித்தார்.