கடலூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் சித்தநாதன் தலைமையில், பெரிய காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், கடலூர் அருகே மதலப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய காட்டு பாளையம் பகுதியில் மலட்டாறு ஒட்டி தனியாருக்கு சொந்தமான மாட்டுப் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் இறந்த ஆடு மாடுகளின் கழிவுகளை ஆற்றில் வீசுவதால், ஆற்று நீரில் துர்நாற்றம் வீசி வருகிறது.
ஆற்றில் இறந்த ஆடு மாடுகளின் கழிவு - மாவட்ட ஆட்சியரிடம் புகார்! - கிளிஞ்சல்கள்
கடலூர்: மலட்டாற்றில் இறந்த ஆடு மாடுகளின் கழிவுகளை வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
மேலும், மாடுகளுக்கு வழங்கப்படும் ரசாயனம் கலந்த தீவனங்கள், கால்நடைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால், நீர் மிகவும் மாசடைந்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த ஆற்றுநீரை ரெட்டிச்சாவடி, சின்ன காட்டுப்பாளையம், எம்ஜிஆர் நகர், கரிக்கன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆற்றில் நீர் மாசுபட்டு காணப்படுவதால், இந்த நீரையும் பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆற்றிலுள்ள கிளிஞ்சல்கள் அழியும் நிலையில் உள்ளதால், மீன் பிடிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத்தர வேண்டும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.