கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறையினர் அதிரடியாகத் தடுத்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர், "நான் பெங்களூர் மணி என்கிற மணிகண்டன் பேசுகிறேன். தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். இதனைத் தடுக்க நினைக்கும் ஒருவரைக் கொலை செய்யப் போகிறேன்" என்று கூறியிருந்தார்.
காவல்துறைக்கு சவால்விட்ட கஞ்சா வியாபாரி கைது! - வைரலான வீடியோவால் வசமாக சிக்கிய கதை - CANNABIS DEALER
கடலூர்: நெய்வேலி அருகே கஞ்சா வியாபாரம் செய்யும் நபர் காவல்துறைக்கு சவால் விடும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியதையது. இதனையடுத்து, மந்தாரக்குப்பம் காவல்துறையினர் அந்நபரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காவல்துறைக்கு சவால் விடுத்த கஞ்சா வியாபாரி; காணொளி!
மேலும் காவல்துறைக்குச் சவால் விடும் விதமாக , 'காவல்துறையினர் தன்னை கைது செய்யமுடியுமா?' எனவும் அவர் சவால் விட்டிருந்தார். இக்காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வந்தது. இந்நிலையில் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.