ஈழத் தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் புறக்கணித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் ஏராளமான பெண்கள், இஸ்லாமியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் பட்டாம்பாக்கம் பகுதியிலிருந்து பண்ருட்டி நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகள், கண்டன கோஷம் எழுப்பினர்.