தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எங்களுக்கும் வாழ்வாதாரம் இருக்கிறது - மாட்டு வண்டி தொழிலாளர்களின் புலம்பல் - மணல் குவாரி அமைத்து தர உண்ணாவிரத போராட்டம்

கடலூர்: மாட்டுவண்டி மணல் குவாரி அமைத்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

எங்களுக்கும் வாழ்வாதரம் இருக்கிறது - மாட்டு வண்டி தொழிலாளர்களின் புலம்பல்

By

Published : Sep 13, 2019, 6:37 PM IST

Updated : Sep 13, 2019, 6:54 PM IST

கடலூர் மாவட்டத்திலுள்ள திருமாணிக்குழி, வானமாதேவி, வான்பாக்கம் ஆகிய பகுதிகளில் மணல் குவாரி அமைத்து கொடுக்காததைக் கண்டித்தும், கடலூர் வட்டத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து மாட்டு வண்டி மணல் குவாரிகளை இயக்காத பொதுப்பணித் துறையை கண்டித்தும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கடலூரில் மாட்டு வண்டி தொழிலாளர்கள்மணல் குவாரி அமைத்து தரக்கோரி உண்ணாவிரத போராட்டம்

மணல் குவாரிகளை மூடி மாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்காதது அவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்ககூடிய வகையில் அமைகிறது என்று புலம்பிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மேலும் நகர செயலாளர் பழனி தலைமை தாங்கிய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நகர செயலாளர் ஒன்றிய செயலாளர் விசுவநாதன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சிஐடியு மாவட்ட தலைவர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.

Last Updated : Sep 13, 2019, 6:54 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details