கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உள்ளது. இதில் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலக்கரி நிறுவனத்தில் கடந்த ஏழாம் தேதி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் அனல்மின் நிலையத்தில் உலர் சாம்பல் லாரிகளில் ஏற்றும் இடத்தில் உள்ள கட்டுமானம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிலாளிகள் அப்பகுதியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.