தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்தது இவர்தான்...! - வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்தது யார் என்பது பற்றி தற்போது காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

Bomb threat to actor Rajinikanth
Bomb threat to actor Rajinikanth

By

Published : Jun 19, 2020, 12:50 PM IST

Updated : Jun 19, 2020, 4:37 PM IST

சென்னை போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் இது குறித்து, தேனாம்பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வெடிகுண்டு வல்லுநர்களுடன் ரஜினிகாந்தின் வீட்டிற்குச் சோதனையிடச் சென்றனர்.

ஆனால் ரஜினிகாந்தின் வீட்டில் கரோனா காரணமாக வல்லுநர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர், ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இதனால் மிரட்டல் விடுத்த நபரின் எண்ணை வைத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் தேடிவந்தனர். அந்த எண்ணானது கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைக் காண்பித்ததால் கடலூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக விரைந்துசென்ற காவல் துறையினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, சிறுவனை காவல் துறையினர் விடுவித்துள்ளனர்.

Last Updated : Jun 19, 2020, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details