கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி.யின் 2ஆவது அனல்மின் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி பாய்லர் வெடித்தது. இந்த தீ விபத்தில் எட்டு பேர் காயமடைந்தனர்.
இதில் சர்புதீன், சண்முகம், பாவாடை, பாலமுருகன் ஆகிய தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளியான அன்புராஜா (47) என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.