தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு! - நெய்வேலி அனல் மின் நிலயைத்தில் விபத்து

கடலூர்: நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் என்எல்சி ஊழியர்கள் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

நெய்வேலி என்எல்சியில் விபத்து

By

Published : Jul 1, 2020, 11:55 AM IST

Updated : Jul 1, 2020, 6:19 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் சுரங்கம் இரண்டில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுரங்கம் இரண்டில் உள்ள யூனிட் ஐந்தில் அமைந்திருக்கும் பாய்லர் திடீரென வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து நெய்வேலி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பாய்லரில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் பத்மநாதன், வெங்கடேச பெருமாள், அருள், சிலம்பரசன், நாகராஜன் உள்பட 7 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது என்எல்சி தொழிலாளர்களின் உறவினர்கள் என்எல்சி சுரங்கம் இரண்டு முன்பு திரண்டிருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

உறவினர்கள் போராட்டம்

முன்னதாக, மே 7ஆம் தேதி மாலை 3.30 மணி அளவில் சுரங்கம் இரண்டில் உள்ள யூனிட் 6இல் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தற்போது 50 நாள்கள் கழித்து என்எல்சியில் பாய்லர் வெடித்து மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: பேருந்தில் பயணம் செய்த தம்பதிக்கு கரோனா: அலறி அடித்து ஓடிய பயணிகள்

Last Updated : Jul 1, 2020, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details