தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு பாஜக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜன 20) கடலூரில் தொடங்கியது.

தொடங்கியது பாஜக மாநில செயற்குழு கூட்டம்
தொடங்கியது பாஜக மாநில செயற்குழு கூட்டம்

By

Published : Jan 20, 2023, 1:22 PM IST

தொடங்கியது பாஜக மாநில செயற்குழு கூட்டம்

கடலூர்: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜன 20) கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பாஜக மையக்கு கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தொடங்கியது. அதில் செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் அடையாள அட்டைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் கடந்த ஓராண்டாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது மற்றும் அதற்காக பூத் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுகிறது. பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது. கூட்டத்தில் திரைப்பட நடிகை நக்மா, கங்கை அமரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ‘இண்டிகோ விமானத்தில் நடந்தது என்ன’ - அண்ணாமலை விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details