கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேலு (30), அரவிந்தன் (28). இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடலூரிலிருந்து தங்களது சொந்த ஊரான புதுச்சத்திரம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது, திருசோபுரம் உப்பனாற்று பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது.