கடலூர்: அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குவலை, இரட்டை மடி வலை மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் படகுகள் பயன்பாட்டில் உள்ளதை தடை செய்ய வலியுறுத்தி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும், புதுச்சேரி மாநில மீனவர்களும் இணைந்து கடலூர் சாமியார் பேட்டை கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை தடை செய்ய வேண்டும் - கிராம மக்கள் திரளாக போராட்டம்! - Puducherry
தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என 60 க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், “தடை செய்யப்பட்ட சுருக்கு மடிகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் முறையில், அனைத்து மீனவ கிராமங்களில் உள்ள் வீடுகள் மற்றும் தங்களுடைய படகுகளிலும் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தேனியில் சந்தன கடத்தல்...! - அதிநவீன கருவிகளுடன் அட்டகாசம் செய்யும் கும்பல்