தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேகமாக கரையை நெருங்கும் மாண்டஸ் புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மாண்டஸ் புயல்(Cyclone Mandous) மாமல்லபுரத்தில் இருந்து 135 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Cyclone Mandous
Cyclone Mandous

By

Published : Dec 9, 2022, 6:55 PM IST

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மாண்டஸ் புயலின் தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது,"மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 135 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதாகவும், மணிக்கு 70 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 121 ஆண்டுகளில் சென்னை - புதுச்சேரி இடையே 12 புயல்கள் கரையை கடந்துள்ளதாகவும், இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடந்தால் இது 13-வது புயல் என்றும் கூறினார். நள்ளிரவில் கரையை கடக்கும் புயலில் தாக்கம் அதிகாலை வரையில் இருக்கும் என்றும் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:கன்னியாகுமரியில் கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details