கடலூர்:காரைக்காடு பகுதியிலுள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், ஜீவா சங்கர். இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் செல்லமாக ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாயை கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
Video: வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்! - வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு
கடலூரில் வீட்டில் வளர்த்த செல்ல நாய்க்கு குடும்பத்தினர் வளைகாப்பு செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்
இரண்டு வயதான நாய் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் வளைகாப்பு செய்ய விரும்பிய ஜீவா சங்கர் குடும்பத்தினர் தங்களது நெருங்கிய உறவினர்களை வரவழைத்து, தனது செல்லப்பிராணிக்கு சீர்வரிசைகள் வைத்தும், கழுத்தில் தங்கச் சங்கிலி அணிவித்தும், மாலை அணிவித்து நலங்கு வைத்தும் ஆசீர்வாதம் செய்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்
இதையும் படிங்க:சிங்கத்தை சீண்டியதால் துண்டாய் போன விரல்