தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் தடைபட்ட நிகழ்ச்சிகள்... வருவாயிழந்து தவிக்கும் ஒலி-ஒளி, டெக்கரேஷன் அமைப்பாளர்கள்! - curfew affected audio video contractors

கடலூர்: ஊரடங்கால் வருவாயிழந்து தவிக்கும் ஒலி-ஒளி அமைப்பாளர்கள், பந்தல் சாமியானா அமைப்பவர்கள் உள்ளிட்ட டெக்கரேஷன் அமைப்பாளர்களுக்கு அரசு உதவ கோரிக்கைவிடுத்தனர்.

வருவாயிழந்து தவிக்கும் ஒலி-ஒளி, டெக்கரேஷன் அமைப்பாளர்கள்
வருவாயிழந்து தவிக்கும் ஒலி-ஒளி, டெக்கரேஷன் அமைப்பாளர்கள்

By

Published : May 8, 2020, 6:36 PM IST

கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.

இதனால், கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் அரசு விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பிழைப்பு நடத்தி வந்த ஒலி ஒளி அமைப்பாளர்கள், பந்தல் அமைப்பாளர்கள், வாடகை பாத்திர உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால், கடலூரில், இந்த தொழிலை மட்டும் நம்பி வாழும் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து, தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தொழிலாளர்கள் அரசிடம் இறைஞ்சுகின்றனர்.

ஊரடங்கால் தடைபட்ட நிகழ்ச்சிகள்... வருவாயிழந்த ஒலி-ஒளி, டெக்கரேஷன் அமைப்பாளர்கள்!

கரோனா நெருக்கடியால், பெரிதாக விளம்பரம் காட்டாத இது போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரம முற்றிலும் பாதிக்கப்பட்டது. அரசு தனிக் கவனமெடுத்து, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் இவர்களையும் அங்கீகரித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது ஒலி-ஒளி அமைப்பாளர்கள், பந்தல் சாமியானா அமைப்பவர்கள் உள்ளிட்ட டெக்கரேஷன் அமைப்பாளர்களின் கோரிக்கையாகவுள்ளது.

இதையும் படிங்க: 'அரசு தளர்வு அளித்தால் போதும்... நாங்கள் பாதுகாப்பாக சிகை திருத்துவோம்'

ABOUT THE AUTHOR

...view details