தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தேரோட்டம்! - ஆருத்ரா தரிசன விழா

கடலூர்:  சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம் விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Arutra Darshan Festival
Arutra Darshan Festival

By

Published : Jan 10, 2020, 10:20 AM IST

பூமியின் மையப்பகுதியாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி திருமஞ்சன விழாவும் முக்கியமானதாகும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும் நடைபெறுவது வழக்கம். ஆருத்ரா தரிசன திருவிழாவானது ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, நாள்தோறும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். நான்கு மாட வீதிகளையும் தேர் வலம் வர பக்தர்கள் நமச்சிவாயா என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதை முன்னிட்டு பெண்கள் நான்கு மாட வீதிகளையும் மாகோலமிட்டு, நடனம் ஆடியபடி வந்தனர். தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, இன்று முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் 2 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

ஆருத்ரா தரிசன விழாவை முன்னீட்டு தேரோட்டம்

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details