கடலுாரில் ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினர் நலக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காவலர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவ பலர் கலந்து கொண்டனர்.
ஆயுதப்படை காவலர் குடும்பத்தினர் நலக்கூட்டம்! - ஆயுதப்படை காவலர்
கடலூர்: ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினருடன் நடைபெற்ற நலக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் காவலர் குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்விடம், காவலர் மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள், மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும், மழைக்காலங்களில் காவலர் குடியிருப்பில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காவலர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர தடை இல்லாமல் வாகன வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், ஒவ்வொரு குடியிருப்பிலும் குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டுமெனவும், காவலர்களுக்கு உடற்பயிற்சி மையம், கூடுதல் தெருவிளக்கு வசதி, குடியிருப்புப் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.