தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2021, 8:23 PM IST

ETV Bharat / state

குடிநீரை துண்டித்த அண்ணாமலை பல்கலைக்கழகம்: காலி பக்கெட்டுகளுடன் மாணவர்கள் தர்ணா

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக குமாரராஜா முத்தையா விடுதியில் மின்சாரம், குடிநீர் வசதி, உணவு இல்லாததால் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் மாணவர்கள்
தர்ணாவில் மாணவர்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் 46வது நாளாக இன்று (ஜனவரி 23) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 3 தினங்களாக காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டது. குமாரராஜா முத்தையா விடுதியில் மின்சாரத்தையும் குடிநீரையும் துண்டித்ததைக் கண்டித்து மருத்துவ மாணவர்கள் விடுதி வாயிலில் முன்பு காலி பக்கெட்டுகளுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிக்கு நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்து, விடுதிகளை விட்டு மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனாலும் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறாமல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மின்சாரம், தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மருத்துவ மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்

குறிப்பாக விடுதிக்கும், உணவுக்கும் சேர்த்து எங்களிடம் அதற்கான தொகையை வசூலித்து கொண்டு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடிவரும் எங்களை மின்சாரம் துண்டித்தும் குடிநீர் வழங்காமலும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details