கீழப்பழுரில் இருந்து சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வரை எழுச்சி நடைபயணம் மேற்கொண்டார்.
இந்த பயணம் நேற்று (அக்.30) கீழப்பழுவூரில் தொடங்கி கரைப்வெட்டி, கண்டராதித்தம், திருமானுர், மீன்சுருட்டி ,
கண்டமங்கலம் வழியாக காட்டுமன்னார்கோவிலில் வந்து முடிவடைந்தது. நடைபயணத்தில் கட்சி நிர்வாகிகள் , உறுப்பினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு அரசு சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் முதல் கடலூர் மாவட்டம் வரை நடைபயணம் மேற்கொண்டு அனைத்து ஏரிகளையும் பார்வையிட்டு வந்துள்ளேன். கடந்த ஆட்சியில் சோழர்கள் உருவாக்கப்பட்ட பழமைவாய்ந்த மிக பெரிய ஏரிகள் பொன்னேரி, வீராணம் ஏரிகளை தூர் வார ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் செலவு செய்யபட்டும் இதுவரை எந்த பயனும் இல்லை.
இதில் ஊழல் நடந்துள்ளது. இதுபோன்ற ஏரிகளை தூர் வாரி விவசாயிகளுக்கு பொதுமக்களுக்கும் பயன்பெற ஏற்பாடுகள் செய்ய பாமக கோரிக்கை வைக்கிறது. இதுபோல் இந்த பகுதி விவசாயிகளுக்கு
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை தகுந்த காப்பீட்டு தொகை வழங்க வில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
சில விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையாக வெறும் 1 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அவர்களது வங்கி கணக்கில் ஏற்றப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமை வர விட மாட்டோம். நெல் குவிண்டாலுக்கு தற்போது கிடைக்கும் விலையை விட 50 விழுக்காடு விலையை கொடுத்து விவசாயிகளின் துயரம் போக்குவோம்” என தெரிவித்தார்.