தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்புலன்ஸ் வருவதற்குத் தாமதம் - சவ ஊர்வல வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட முதியவர் உடல் - சின்னதுரை மங்கலம்பேட்டை

கடலூர்: ஆம்புலன்ஸ் வருவதற்குத் தாமதமானதால் இறந்த முதியவரின் உடல், சவ ஊர்வல வண்டியில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

Cuddalore
Cuddalore

By

Published : Jun 25, 2020, 6:29 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (58). கூலி தொழிலாளியான இவர், நேற்று மாலை மூன்று மணியளவில் தனது உறவினர் இறுதிச் சடங்கிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். சின்னதுரை பள்ளிப்பட்டு கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மங்களம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவலர்கள், விசாரணை நடத்தினர். உயிரிழந்த சின்னதுரையின் உடலை உடற்கூறாய்வு பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வருகைக்காக இரண்டு மணி நேரமாகக் காத்திருந்தனர்.

சவ ஊர்வல வண்டியில் எடுத்துச் செல்லப்படும் முதியவர் உடல்

ஆனால், ஆம்புலன்ஸ் வராததால் சவ ஊர்வலம் எடுத்துச் செல்லும் வாகனத்தில் உயிரிழந்த சின்னதுரையின் உடலை உடற்கூறாய்விற்காக அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வராததால் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details