கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெல் விவசாயம் செய்து வருபவர், நெல்செல்வம். இவர் இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய நெல் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் படியாக, பாரம்பரிய நெல் நடவில் நெல் பயிரினை கொண்டு ஓவியம் வரைந்துள்ளார்.
குறிப்பாக சேரர், சோழர், பாண்டியர் ஆகிய பெயர்கள் மற்றும் அவர்களது சின்னங்கள் ஆகியவற்றை வரைந்துள்ளார். அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தின் ஓவியம் பலரையும் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.