கடலூர் மாவட்டத்தின் எல்லைகளில் ஒன்றான புதுச்சேரி பகுதியில், தமிழ்நாட்டை காட்டிலும் மது விலை குறைவாக இருப்பதால் தினந்தோறும் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து மதுபிரியர்கள் வருவது வழக்கம். இவ்வாறு நேற்று (அக் 20) இரவு ஆல் பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது மது அருந்திய ஒருவர், பாலத்தின் விளிம்பின் மேல் படுத்து உறங்கியுள்ளார்.
தென்பெண்ணை ஆற்று பாலத்தில் உறங்கிய மதுபிரியர் - பத்திரமாக மீட்ட காவலர் - policeman rescued him
குடிபோதையில் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மேல் விளிம்பில் படுத்து உறங்கியவரை பத்திரமாக மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்று பாலத்தில் உறங்கிய மதுபிரியர் - பத்திரமாக மீட்ட காவலர்
இந்த பாலம் சுமார் 70 அடி உயரம் கொண்டது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அப்போது அவ்வழியாக சென்ற காவலர் ராஜதீபன், உடனடியாக அவரை மீட்டு ஆட்டோ மூலம் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு நூலிழையில் உயிர் தப்பிய மதுபிரியரை மீட்ட காவலர் ராஜதீபனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதையும் படிங்க:மீனவர்கள் மீது கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு