தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தபால் ஓட்டு பதிவில் முறைகேடு- அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் புகார் - Ms. Ramajayam complains

கடலூர் தபால் ஓட்டு பதிவில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தபால் ஓட்டு பதிவில் முறைகேடு- அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் புகார்
தபால் ஓட்டு பதிவில் முறைகேடு- அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் புகார்

By

Published : Apr 9, 2021, 6:21 PM IST

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 2400க்கும் மேற்பட்ட அரசு அலுவல அலுவலர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர். முன்னதாக, அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அன்றே பலரும் தபால் வாக்குகளை பதிவு செய்த நிலையில் ஏராளமான அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் மூலம் மீண்டும் தபால் வாக்கு பதிவு சீட்டு வந்துள்ளது.

தபால் ஓட்டு பதிவில் முறைகேடு- அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் புகார்

இதனால், தபால் வாக்குப்பதிவு என்பது முறையாக நடைபெறவில்லை என்றும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் உடனடியாக குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தபால் வாக்குகளை நிறுத்தி வைக்கவேண்டும். மேலும், மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலகரிடம் இன்று (ஏப்.9) குறிஞ்சிப்பாடி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செல்வி ராமஜெயம் குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

இம்மனுவை மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தபால் மூலம் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். இதேபோன்று, சம்பவம் தமிழ்நாடு முழுவதும் நடந்து இருப்பதாகவும் தனக்கு ஐயம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக இது தொடர்பாக விசாரணை செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: காலமானார் சென்னையின் 10 ரூபாய் மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details