கடலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் கோவிந்தசாமி களமிறங்குகிறார். இதனையடுத்து விருத்தாசலத்தில்பாமக வேட்பாளர் கோவிந்தசாமி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கோவிந்தசாமி பேசுகையில், “நான் லஞ்சம் வாங்கமாட்டேன்- இனிவரும் காலங்களில் தேர்தலில் நிற்கவும் மாட்டேன். இதுதான் எனது கடைசித் தேர்தல். எனவே என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.
அதன்பிறகு பேசிய அமைச்சர் சம்பத், “அதிமுக கூட்டணிக் கட்சியினர் கடமை உணர்வோடு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசு இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாட்டுக்குதேவையான திட்டங்களை கொண்டுவர முடியும்” என்றார்
இக்கூட்டத்தில் பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் அருள்மொழி, மாநில மகளிர் அணி செயலாளர் தமிழரசி, மாவட்டச் செயலாளர் சுரேஷ், தேமுதிக மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.