விருதாச்சலம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதனூர் பகுதிக்கு தார்ச்சாலை அமைத்துத் தருமாறு பல மாதங்களாகத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும்; அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், சலிப்படைந்த பொதுமக்கள், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஒருங்கிணைப்பில் பொதுப்பணித்துறை அலுவலர்களைக் கண்டித்தும், தார்ச் சாலை வசதியை ஏற்படுத்தித்தர வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை அமைக்க கோரிக்கை விடுத்து மக்கள் போராட்டம்! தகவல் அறிந்து வந்த விருத்தாச்சலம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம், தானே பேசி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன் உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக விருத்தாச்சலம் - சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : முதலமைச்சர் வருகை: அவசரகதியில் நடக்கும் சாலையமைக்கும் பணிகள்