சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்படும். இந்தாண்டு ஆருத்ர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜர் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் இன்று கோயில் உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்து, திருவிழா நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர், சிறப்பு ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மறுநாள் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் மகா அபிஷேகம், லட்சார்ச்சனை, ஆபரண அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் முடிந்த பிறகு மதியம் நடராஜர், சிவகாமசுந்தரி சமேதம் நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
இதையும் படிங்க: ஸ்ரீஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் ஆரம்பம்!