கடலூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ளது ஈச்சங்காடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த எலி என்கின்ற கிருஷ்ணமூர்த்தி(28) கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று (ஜனவரி 10) அவர் வீட்டின் அருகிலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஜாமீனில் வெளியில் வந்திருப்பது தெரியவந்தது. கடலூர் முதுநகரைச் சேர்ந்த ஜோசப்(18) என்பவர் கோவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கல்லூரி விட்டு நின்று விட்டார். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி இவர் வீட்டை விட்டு வெளியே சென்று நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அவரது தாய் கொடுத்த புகாரில் அடிப்படையில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது அவருடைய செல்போனில் கடைசியாக பேசிய விஜய், பிரபாகரன் ஆகிய இரண்டு பேரையும் பிடித்து போலீசார் விசாரித்ததில் ஜோசப்பை கழுத்தை அறுத்து கொலை செய்து காரைக்காடு பகுதியில் உள்ள உப்பனாற்றில் சடலத்தை புதைத்ததாக தெரிவித்தனர்.