தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீன பெண்ணை கரம் பிடித்த கடலூர் இளைஞர்! - tamil news

கடலூரை சேர்ந்த இளைஞருக்கும் சீனா நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

கடலூரை சேர்ந்த இளைஞருக்கும் சீனா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும்  இந்திய முறைப்படி திருமணம்
கடலூரை சேர்ந்த இளைஞருக்கும் சீனா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்திய முறைப்படி திருமணம்

By

Published : Apr 10, 2023, 10:03 PM IST

கடலூரை சேர்ந்த இளைஞருக்கும் சீனா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்திய முறைப்படி திருமணம்

கடலூர்:மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீனா நாட்டைச் சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் இன்று ( ஏப்.10 ) காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், இந்திய கலாச்சாரத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமகன் பாலச்சந்தர் மணமகள், யீஜியோ இருவருக்கும், பட்டு வேஷ்டி சட்டை மற்றும் பட்டு புடவை தங்க அணிகலன் அணிந்து, தமிழ் முறைப்படி யாக குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மங்கள இசையுடன் திருமாங்கல்யம் கட்டி திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, சீனா நாட்டைச் சேர்ந்த மணமகள் யீஜியோ, திருமணத்திற்கு பிறகு நடைபெற்ற அனைத்து தமிழ் முறை சம்பிரதாயத்தை முறைப்படியும், ஆர்வமுடனும் ஒவ்வொன்றாக மனமகிழ்ச்சியுடன் செய்தார். அப்போது யீஜியோவின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆனந்தமாக புகைப்படத்தை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், அவர் மணமகனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களை அரவணைத்து அன்புடன் பேசி மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், மணமகன் பாலச்சந்தர் கூறியதாவது, “சீனா மற்றும் பாங்காகில் தொழில் முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது நாங்கள் இருவரும் சமூக வலை தளங்கள் மூலமாக தொடர்ந்து பேசிக் வந்தோம். இந்த தொடர்பு, நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து, இரண்டு பேரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன், முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால், இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கை பயணம் ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம்” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகன் என்பவருக்கும் இவர்களது திருமணத்திற்கு பிறகு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், சினிமா படத்தில் காண்பது போல் ஒரே மேடை ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கடல் கடந்து காதல் மலர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் சீனா நாட்டைச் சேர்ந்த பெண்ணை கடலூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் இந்திய கலாச்சாரத்தின்படியும், தமிழ் முறைப்படியும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தையும் மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:விமான நிலைய ஊழியர் கொடூர கொலை - நீதிமன்றத்தில் காவல்துறை கூறிய பகீர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details