கடலூர்:விருத்தாசலம் அருகே உள்ள வலசை கிராமத்தைச்சேர்ந்தவர், காசிப்பிள்ளை. விவசாயியாக உள்ளார். இவர் தனது மனைவி சாந்தகுமாரி உடன் அங்கு வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 25) 11 மணி அளவில் சாந்தகுமாரி தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது முயல்வேட்டைக்கு வந்த நபர்கள் நாட்டுத்துப்பாக்கியால் முயலை நோக்கி சுட்டபோது, தவறுதலாக சாந்தகுமாரி மீது பால்ரஸ் குண்டு பாய்ந்து இடதுபுற இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.