தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுத்தேர்வு நாளில் தாய் மரணம் - 10-ம் வகுப்பு பரீட்சை எழுதிய மகன் - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தேர்வு நாளில் தாய் இறந்த நிலையில், மாணவன் ஒருவன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் இறந்து அடக்கம் செய்யப்படாத நிலையிலும்  10ம் வகுப்பு பரீட்சை எழுதிய மாணவன்
தாய் இறந்து அடக்கம் செய்யப்படாத நிலையிலும் 10ம் வகுப்பு பரீட்சை எழுதிய மாணவன்

By

Published : May 25, 2022, 10:40 AM IST

கடலூர்,மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா பெத்தநாயக்கன் குப்பம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி சலேத்மேரி வயது (33), இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவருக்கு ஜோஷ்வா என்ற (15) வயது மகன் உள்ளான். ஜோஷ்வா குறிஞ்சிப்பாடி ஸ்ரீராம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட (9) வயது தங்கையும் இரண்டு சகோதரர்களும் இவருக்கு உள்ளனர்.

இந்நிலையில், தன் தாய் இறந்து அடக்கம் செய்யப்படாத நிலையிலும் (மே24) நேற்று துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜோஷ்வாபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தந்தை இறந்த துக்கத்திலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மகள்!

ABOUT THE AUTHOR

...view details