கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப்பணியாற்றி வருபவர், ஷ்யாம் சுந்தர். இவர் சமட்டிக்குப்பத்தைச்சேர்ந்த எஸ்.ஸ்ரீகாந்த்(40) என்பவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளார்.
ரவுடியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது - கடலூர் ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறை
ரவுடியிடம் ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் காவல்துறை ஆய்வாளரை கடலூர் ஊழல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
ரவுடிப்பட்டியலில் உள்ள அவரை காவல் நிலைய பிணையிலேயே விடுவித்துள்ளார். இதற்காக, அவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, அவர் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த கூடுதல் துணை கண்காணிப்பாளர் தேவநாதன் மற்றும் காவல்துறையினர் இரவில் காவல்நிலையத்திற்குச்சென்றனர்.
அங்கு ஸ்ரீதர், ஏற்கெனவே திட்டமிட்டபடி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் பிரிவு காவல்துறையினர் ஷ்யாம் சுந்தரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.