நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அய்யாபிள்ளை என்கிற பூராசாமியும் (39), பரிமளா (40) என்னும் பெண்ணும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர். இதில் பரிமளா, கணவரை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரே பகுதியைச் சேர்ந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனிடையே வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அய்யாபிள்ளை மார்ச் 9ஆம் தேதி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பரிமளாவை தேடி அவரது வீட்டிற்கு சென்ற அய்யாபிள்ளை, அவர் இல்லாத காரணத்தினால் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பரிமளா கடலூர் மாவட்டம் வடலூரிலுள்ள ஆர் கே நகர் பகுதியில் இருப்பதாக கூறியதையடுத்து, மார்ச் 13 ஆம் தேதி அவரை நேரில் சென்று பார்த்துள்ளார். இதன்பிறகு அய்யாபிள்ளை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.