தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறிஞ்சிப்பாடியில் மறுவாழ்வு முகாம் இடத்திலேயே புதிய குடியிருப்பு கட்டி தர வேண்டும்: இலங்கை அகதிகள் மனு - குறிஞ்சிப்பாடியில் மறுவாழ்வு முகாம் இடத்திலேயே புதிய குடியிருப்பு கட்டி தர வேண்டும்

குறிஞ்சிப்பாடியில் 30 வருடங்களாக வசித்து வரும் இலங்கை அகதிகள், மறுவாழ்வு முகாம் இடத்திலேயே புதிய குடியிருப்பு கட்டி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இலங்கை அகதிகள் மனு
இலங்கை அகதிகள் மனு

By

Published : Aug 1, 2022, 7:46 PM IST

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 30 வருடங்களாக 300-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்து தற்காலிக குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்டித் தர மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள இடத்தில் இருந்து வேலைக்கு செல்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.

இலங்கை அகதிகள் மனு

ஆனால் வீடு கட்டித்தரப்படும் இடமான ரங்கநாதபுரம் கிராமம் 10 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளதால் தங்களுக்கு எந்தவித வசதிகளும் அங்கு கிடைக்காது.

பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றாலும் மிகவும் கடினம் என்பதால் உடனடியாக தற்போது உள்ள இடத்திலேயே வீடுகளை கட்டித் தரக்கோரி வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியமை சந்தித்து மனு அளித்தனர்.

இதையும் படிங்க:பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் கருத்து வேதனை அளிக்கிறது: ஜாக்டோ ஜியோ

ABOUT THE AUTHOR

...view details