தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 7) ஒரே நாளில் 3,616 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594ஆக உயர்ந்துள்ளது.
கடலூரில் நேற்று வரை கரோனா தொற்றால் 1,315 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 64 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,379ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.