பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கடலூரில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 80% சதவிகிதத்துக்கும் மேல் தேர்ச்சி...!
கடலூர்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 80% சதவிகிதத்துக்கும் மேல் கடலூர் மாவட்ட மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் 218 பள்ளிகளில் 104 தேர்வுமையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 30 ஆயிரத்து 630 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 785 மாணவர்களும் 14 ஆயிரத்து 340 மாணவிகளும் தேர்வு எழுதினர். மேலும் 1,251 பேர் தனியாக தேர்வு எழுதினர்.
இன்று காலை வெளியான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 88.45 சதவிகித மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மாணவர்கள் 85.46% சதவிகிதமும், மாணவிகள் 91.05% சதவிகிதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் 26 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 47 பள்ளிகள் 100% தேர்ச்சியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.