இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், " கடலூரில் மணலுக்காக பதிவு செய்யப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில், கடந்த ஐந்து மாதங்களாக மணல் ஏற்றாமல் ஆன்லைன் பதிவு செய்ய முடியாமல் உள்ளனர். மேலும், மாதம் ஒரு முறை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வருடத்திற்கு 12 லோடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகின்றன. அதிலும் மழைக்காலங்களில் பதிவு செய்வதில் தவறு நேர்ந்தால் வருடத்தில் எட்டு லோடுகள் மட்டுமே கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை நம்பி இருக்கும் மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மணல் குவாரிகளுக்கு 50 விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு!
கடலூர்: மணல் குவாரிகளுக்கு 50 விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க இடம் வழங்க அனுமதி வேண்டும் எனவும்மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனிடம் லாரி உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.
மேலும், லாரி பராமரிப்பு செலவுக்காக வருடத்திற்கு ஒன்றரை லட்சம் செலவாகிறது. ஆன்லைன் திட்டம் வருவதற்கு முன்னர், ஒரு நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் 20,000 லோடுகள் கிடைத்தன. தற்போது வெறும் 500 லோடுகள் மட்டுமே கிடைக்கின்றன. எனவே, மணல் குவாரிகளில் ஆன்லைனில் பதிவு செய்வதில் 50 விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லையெனில் அனைத்து வாகனங்களையும் ஒப்படைக்க இடம் வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பாக ஜூன் 12ஆம் தேதி ஆர் சி புத்தகம் மற்றும் வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்" என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.