கடலூர்: சிதம்பரத்தை அடுத்த அம்மாபேட்டை வள்ளலார் நகரில் தனலட்சுமி (80) என்கிற மூதாட்டி தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். முன்னதாக இவர் தன் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கழிவறைக்குச் செல்கையில், எதிர்பாராமல் கால் இடறி கிணற்றிற்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
சிதம்பரத்தில் கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டி உயிருடன் மீட்பு! - கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
கடலூர்: கிணற்றில் தவறி விழுந்த 80 வயது மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் போராடி உயிருடன் மீட்டுள்ளனர்.
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி
தொடர்ந்து, இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டனர். பின் அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிங்க:ஆக்சிஜன் 90க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் கரோனா சிகிச்சை!