உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், போர்க்கால அடிப்படையில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு மீண்டும் அரசு பிறப்பித்துள்ளது. முகக் கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி, தகுந்த இடைவெளி உள்ளிட்டவை பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.