கடலூர்: ஏ.குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் 6 சிறுமிகள் அப்பகுதியில் பாய்ந்தோடும் கெடிலம் ஆறு தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தடுப்பணையின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 7 பேரின் உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.