தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கத்தியுடன் இருக்கும் உருவப்படத்திற்குப் பால் ஊற்றி பிறந்தநாள் கொண்டாடிய 6 பேர் கைது! - குற்றச் செய்திகள்

கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே மறைந்த ஊராட்சிமன்றத் தலைவர் கத்தியுடன் இருக்கும் இருக்கும் உருவப்படத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் ஆறு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கத்தியுடன் இருக்கும் உருவ படம்
கத்தியுடன் இருக்கும் உருவ படம்

By

Published : Jun 18, 2021, 10:50 AM IST

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேவுள்ள கீழ் அருங்குணம் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தவர் சுபாஷ் என்கிற நிலவன். இவர் 2020 ஜூலை 19 அன்று வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இந்நிலையில், சுபாஷின் பிறந்தநாளான நேற்று (ஜூன் 17) அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், ஒரு வீட்டின் சுவரில் சுபாஷ் கத்தியுடன் இருக்கும் உருவப்படத்திற்கு பாலூற்றி ஆரவாரம் செய்து கொண்டாடியுள்ளனர்.

கத்தியுடன் இருக்கும் உருவப்படம்

இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லிக்குப்பம் காவல் துறையினர், கீழ்அருங்குணம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த சுதாகர், ரபிதாஸ், பிரவீன்குமார், கண்ணதாசன், அபினேஷ் , ஸ்ரீதர் ஆகிய ஆறு பேரை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: மது போதையால் வந்த வினை - மாணவன் கொலை வழக்கில் ஐவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details